நாமக்கல்

நகராட்சி குப்பைக்கிடங்கில் நான்கு நாள்களாக பரவும் புகை மூட்டத்தால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு

DIN


ராசிபுரம் நகராட்சிக்குச் சொந்தமான உரக்கிடங்கில் நான்கு நாள்களாக எரிந்து கொண்டிருக்கும் புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதியில் மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம் தட்டான்குட்டை ஏரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை சேகரிக்கும் உரக்கிடங்கு உள்ளது. இதில், நகராட்சி பகுதியில் சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை கொண்டு சென்று மலை போல் குவித்து வைக்கப்பட்டு வருகிறது.
இங்கு சுமார் நூற்றுக்கணக்கான டன் அளவுக்கு குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப் பகுதியில் அடிக்கடி குப்பை மேட்டில் தீவைக்கப்படுவதால், புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. சிலநேரங்களில் பெரும் நெருப்பாக பரவி சுற்றுப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தற்சமயம் குப்பைமேட்டில் நான்கு நாள்களாக தீப்பரவி எரிந்து வருகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால், பல்வேறு பகுதியில் பரவி சுற்றுப்புறத்தில் குடியிருப்போருக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது.
விவசாய நிலங்களும் பாதிக்கின்றன. மேலும் மக்கள் சுகாதாரம் பாதிக்கப்படுவதால், இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து எரிவதால், ஏற்படும் பாதிப்பைத் தடுக்க குப்பை எரியூட்டப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் நல்வினை விஸ்வராஜூவலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT