நாமக்கல்

பள்ளி மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி

DIN

ஜே.சி.ஐ. ராசிபுரம் மெட்ரோ சார்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு "எம்பவரிங் யூத்' என்ற தலைப்பில் தனிமனித மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.
இப்பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் ஜே.சி.ஐ. தலைவர் பி.பூபதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தேவா செங்குட்டுவேல், கெளரவ விருந்தினராக மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை தொடக்கி வைத்து பேசினர். மண்டலப் பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், பிரேமலதா, ராகவன், தாரண்யா ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாபு, ஆர்.புதுப்பாளையம் ஆசிரியர் செளந்திரராஜன், ராஜேந்திரன், ஜே.சி.ஐ. சங்கத்தின் முன்னாள் தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் நிலாமணி கணேசன், ராஜேஷ்குமார், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT