நாமக்கல்

திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக். பள்ளி வகுப்புகள் தொடக்க விழா

DIN


திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தாளாளர் மற்றும் செயலர்  மு. கருணாநிதி தலைமை வகித்தார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்  மற்றும் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி,  துணை மேலாண்மை இயக்குநர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் கிருபாநிதி, நிர்வாக இயக்குநர் நிவேதனா கிருபாநிதி,  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போது விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகருமான விஸ்வநாதன்,  தலைமை நிர்வாகி சொக்கலிங்கம்,  அட்மிஷன் இயக்குநர் வரதராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மற்றும் கல்லூரியின் முதல்வர்கள் மற்றும் டீன் அகடமிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சென்னை மாற்றம் அமைப்பின் நிறுவனர்  சுஜித் குமார் கலந்து கொண்டார். 
சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில்,  பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடக் கூடாது.  குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடும் போது தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றார்.  
விவேகானந்தா வித்யாபவன் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பேருந்து மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த வருடம் முதல் 5 - ஆம் வகுப்பு வரை இருபாலருக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பெண்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சஉஉப/ ஐஐப  ஒஉஉ பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன என்று  நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT