நாமக்கல்

கோவா முதல்வர் மறைவு: அரைக்கம்பத்தில் தேசியக் கொடி

DIN

கோவா மாநில முதல்வர் மறைவையொட்டி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
கோவா மாநில முதல்வராக பதவி வகித்தவர் மனோகர் பாரிக்கர். பாஜகவைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவையொட்டி, நாடு முழுவதும் திங்கள்கிழமை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.  இதனால், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பறந்த தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.  அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.  தமிழகத்திலும் துக்கம் அனுசரிக்கப்பட்டதால், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT