நாமக்கல்

காவிரி பாலம் அருகே வாகனம் மோதியதில் முதியவர் பலி

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே சனிக்கிழமை  இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார்

DIN


பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே சனிக்கிழமை  இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் சணப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (73). இவர் சனிக்கிழமை இரவு கரூர் மாவட்டம், நொய்யல் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பரமத்தி வேலூர் காவிரிப் பாலம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூர்த்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT