நாமக்கல்

பொறியியல் சேர்க்கை: நாமக்கல் மையத்தில் 29 பேர் விண்ணப்பிப்பு

DIN

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க, நாமக்கல் மையத்தில் சனிக்கிழமை வரை 29 பேர்விண்ணப்பித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு  ஜூன் மாதம் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியது. தமிழகம் முழுவதும் 43 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்கள் மட்டுமின்றி, தனியார் இணையதள மையங்களிலும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கின்றனர்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 நாள்களில் 29 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
பேராசிரியர் வி.மகாதேவன் தலைமையில் மூன்று பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க உதவுகின்றனர். ஆன்-லைனில் விண்ணப்பிக்க மே 31-ஆம் தேதி கடைசி
நாளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT