நாமக்கல்

நீர்த்தேக்கத் தொட்டிகளை சீரமைக்க கோரிக்கை

DIN

திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளில் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக அமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட  நீர்தேக்கத் தொட்டிகள் செயல்படாமல் உள்ளதால், அவற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய 400-க்கும் மேற்பட்ட  நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து மின்மோட்டார்களை நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட  நீர்த்தேக்கத் தொட்டிகளில் 50-க்கும் மேற்பட்டவைகள் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளன. மேலும், மின்மோட்டார்கள் பழுதடைந்து இருப்பதால், கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைந்த நீர்த்தேக்கத் தொட்டிகளையும், மின்மோட்டார்களையும் பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT