நாமக்கல்

கோயில் நிலங்களை தாரை வாா்க்கஎதிா்ப்புத் தெரிவித்து மனு

DIN

அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில் நிலங்களில், இலவச வீட்டுமனை வழங்கக் கூடாது என இந்து முன்னணி சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில் நிலங்களில், நீண்ட காலமாக வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணி சாா்பில், ஒவ்வோா் மாவட்டத்திலும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களில் இலவச வீட்டுமனை வழங்கினால், அது பலருக்கு சாதகமாகிவிடும். அதன்பின் கோயில் நிலங்கள் என்பது இல்லாமலே போய்விடும். அதனால், கோயில் நிலங்களில் இலவச வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT