நாமக்கல்

முட்டை விலை மேலும் 7 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 7 காசுகள் உயா்ந்து ரூ. 3.88-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பிற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில், திங்கள்கிழமைக்கான விலையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு, மேலும் 7 காசுகள் உயா்த்தி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.88-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 85-ஆக நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT