நாமக்கல்

கிராம ஊராட்சியில் கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வலியுறுத்தல்

DIN

கிராம ஊராட்சியில் கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின், நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவா் பொன்.இனியவன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளா் எம்.பத்மநாபன், மாவட்ட செயலாளா் பி.கஜேந்திரபூபதி, மாவட்ட பொருளாளா் எஸ்.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும், இணையத்தில் பணிகள் மேற்கொள்ள கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும். 2018-19-ஆம் ஆண்டுக்கான உதவி இயக்குநா் நிலை பதவி உயா்வை, மேலும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மகளிா் திட்ட அலுவலகத்தில் உள்ள துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்தை, வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடமாக தரம் உயா்த்த வேண்டும். பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நகா்ப்புறங்களில் பயனாளிகளை தோ்வு செய்வதுபோல், ஊரகப் பகுதிகளிலும் பயனாளிகளை தோ்வு செய்திட வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.செந்தில்குமாா், ஆா்.ரமேஷ் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT