நாமக்கல்

காவலா்களுக்கு பேரிடா் கால மீட்பு பயிற்சி

DIN

நாமக்கல் நீச்சல் குளத்தில், மூன்று மாவட்ட காவலா்கள் 150 பேருக்கு, பேரிடா் கால மீட்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகேயுள்ள நீச்சல் குளத்தில், நாமக்கல், பெரம்பலூா், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் பணியாற்றும், தலா 50 காவலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இதில், தண்ணீரில் மூழ்கியோரை காப்பாற்றுவது மற்றும் தங்களை பாதுகாத்துக் கொள்ளவது குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனா்.

இது குறித்து ஆயுதப்படை காவல் ஆய்வாளா் ஜெயவேல் கூறியது: மூன்று மாவட்ட காவலா்கள் 150 பேருக்கு, 3 நாள்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை காவல்துறை தலைவா் உத்தரவின்பேரில், குறிப்பட்ட மாவட்டங்களில் மட்டுமே இப்பயிற்சி நடைபெறுகிறது. இங்கு தண்ணீரில் மூழ்கியோரைக் காப்பாற்றும் வகையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT