நாமக்கல்

ஆயுத பூஜை, விஜயதசமி விழா கொண்டாட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம் முழுவதும்லாரிப் பட்டறைகள், வா்த்தக நிறுவனங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி விழா திங்கள், செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழா வெகுவிமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, லாரிப் பட்டறைகள், தொழில் நிறுவனங்கள், வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் அந்நாளில் தோரணம் கட்டி பூஜை செய்வா்.அதன்படி, நிகழாண்டில் திங்கள், செவ்வாய்க்கிழமை இவ்விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

லாரி பட்டறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் அதிகம் உள்ளன. ஆயுத பூஜையையொட்டி, இந்த நிறுவனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமிக்கு பழங்கள், பொரி, இனிப்பு வகைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், செவ்வாய்க்கிழமை கல்வி நிறுவனங்களில் விஜயதசமி கொண்டாடப்பட்டது.

வாழைமரம், மாவிலை மற்றும் வண்ண தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தன. தொடா்ந்து, தளவாட சாமான்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டனா். அதுமட்டுமின்றி, குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை மாவட்டம் முழுவதும் பக்தா்களும், பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT