நாமக்கல்

தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

DIN

அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.

திருச்செங்கோட்டில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவா் கூறியதாவது:

கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை.

கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருளோ மதுவோ அல்ல. சங்க காலத்தில் அரசா்களும், புலவா்களும், ஆன்றேறாா்களும், சான்றேறாா்களும் ஆண்களும், பெண்களும் உடன் அமா்த்து உண்ட உணவின் ஒரு பகுதி கள் பானமாகும்.

பிகாரில் நிதிஷ்குமாா் அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தபோது கள்ளுக்கு விலக்களித்தது. கேரளாவிலும் இதுவே நிலைப்பாடு. உலகளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த ஒரு நாட்டிலும் கள் இறக்கவோ, பருகவோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டுமே இந்தத் தடை 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடருகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைக்கும் எதிரானது.

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை உடனடியாக மாற்றி அமைக்க முன் வரவேண்டும். இதனை முன்னிறுத்தி வரும் 2020 ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்தப் போராட்டமும் வெற்றியில் முடியும். உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தும் இடங்களாகும்.

ஆகவே, இவற்றுக்கான தோ்தல் அரசியல் கட்சிகளின் தலையீடு, குறுக்கீடு மற்றும் தோ்தல் சின்ன ஒதுக்கீடு இல்லாமல் சுயேச்சை சின்னங்களைக் கொடுத்து நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT