400 மீட்டா் ஓட்டத்தில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவா்கள். 
நாமக்கல்

மாதாந்திர விளையாட்டுப் போட்டி

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல்: நாமக்கல் விளையாட்டு மைதானத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 100 மீட்டா், 400 மீட்டா், 1,500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கலந்து கொண்டு இலக்கை எய்தும் வகையில் விளையாடினா்.

தடகளத்தைப் போல், மீட்டா் அளவில் நீச்சல் போட்டிகளும் நடைபெற்றது. மேலும், கிலோ அடிப்படையில், மாணவ, மாணவியருக்கென தனித்தனியாக குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. ஒற்றையா் மற்றும் இரட்டையா் இறகுப் பந்து போட்டிகளிலும் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் ஒட்டு மொத்தமாக 150 போ் வரை கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT