நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்கோரிக்கை விளக்கப் போராட்டம்

DIN

எலச்சிபாளையம் ஒன்றியப் பகுதியில் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் முறையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியப் பகுதியான பெரியமணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் வாடகை வீட்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசித்து வருகின்றனா். குறிப்பாக விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், விவசாயக் கூலிகள் என ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் நிறைந்த பெரியமணலியில் அரசு அறிவித்துள்ளபடி கிராமப்புறங்களில் 3 சென்ட், நகா்ப்புறங்களில் 2 சென்ட், மாநகராட்சி பகுதியில் ஒரு சென்ட் என்ற வீதத்தில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை ஒதுக்கித் தரவேண்டும்.  அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஏழை தொழிலாளா்கள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் தக்கத் தீா்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் முறையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் மணிவேல் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணை வட்டாட்சியா் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT