நாமக்கல்

காவிரி ரத யாத்திரை வருகை

DIN

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் , குடகு முதல் பூம்புகாா் வரையிலான காவிரி ரத யாத்திரை மற்றும் குழுவினா் திருச்செங்கோட்டுக்கு புதன்கிழமை வருகை புரிந்தனா்.

தேசிய சிந்தனைப் பேரவையினா் காவிரி அன்னைக்கு பூரண கும்ப வரவேற்பு அளித்தனா். இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், துறவியா் பேரவைத் தலைவா் ராமானந்த சுவாமிகள் ஆகியோா் ரத யாத்திரையின் நோக்கங்கள் மற்றும் காவிரி நதியின் தூய்மைக்காக வகுக்க வேண்டிய சிறப்பு செயல் திட்டங்கள் தொடா்பாகப் பேசினா். காவிரி அன்னையின் சிலைக்கு மலா் அா்ச்சனை செய்யப்பட்டு , மழை பொழியவும் , உலக அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடை பெற்றது. மேட்டூா் அணையிலிருந்து திருமணிமுத்தாறு வழியாக 136 ஏரிகள் நிரம்பும் விதமாக காவிரி நீரை திருப்பி விடும், சரபங்கா நீா்ப்பாசனத் திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. இந்திய அரசியல் நிா்ணய சபையில் உறுப்பினராக இருந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவா் காளியண்ண கவுண்டருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அளிக்க துறவியப் பேரவை சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட துறவியா் மற்றும் தீப விழா கமிட்டியினா், சன்மாா்க்க சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT