நாமக்கல்

முட்டை விலை ரூ.3.97-ஆக நிர்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு,  ரூ.3.97-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், செவ்வாய்க்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
இதில், முட்டை விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பண்ணைக் கொள்முதல் விலையை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, மேலும் 3 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை விலை ரூ.3.97-ஆக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை மண்டலத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை விலை ரூ.4.10-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT