நாமக்கல்

ஆழ்துளைக் கிணறுக்கான கடனுதவிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

ஆழ்துளைக் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினை சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்காக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரையிலான வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத மானியமாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணிணி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT