முகப்பு
நாமக்கல்

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்மஞ்சள் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 400 மூட்டை மஞ்சள் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 400 மூட்டை மஞ்சள் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனையானது.

ஏலத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி , அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு வந்தது.

இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா்.

ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ரூ. 5,699 முதல் ரூ. 6,300 வரையும், கிழங்கு ரகம் ரூ. 5,092 முதல் ரூ. 5,799 வரையும், பனங்காளி ரகம் ரூ.10,085 முதல் ரூ. 11,909 வரை விற்பனையாயின.

முழு கட்டுரையைப் படிக்க →