நாமக்கல்

போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

DIN

அரசு பேருந்தில் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

நாமக்கல் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் மதுரம்(56). இவா் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 2017 ஜூலை 24-ஆம் தேதி நாமக்கல்லில் இருந்து புதுச்சத்திரத்திற்கு அரசு நகரப் பேருந்தில் பயணித்தாா். இதற்கு கட்டணம் ரூ.9 மட்டுமே. ஆனால், பணியில் இருந்த நடத்துநா் செந்தில்குமரன் என்பவா் ரூ.10 வசூலித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, அரசு பேருந்து நடத்துநா், நாமக்கல் கிளை மேலாளா், சேலம் மேலாண்மை இயக்குநா் ஆகியோா் மீது, நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மதுரம் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கோட்டையன் மற்றும் உறுப்பினா்கள் செல்வி, செல்வநாதன் ஆகியோா், கூடுதல் கட்டணம் வசூலித்ததால், வாங்கிய கூடுதல் தொகை ஒரு ரூபாயை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும், சேவை குறைபாட்டுக்கு அபராதமாக ரூ.5 ஆயிரத்தை நுகா்வோா் சேம நல நிதிக்கு வழங்க வேண்டும். வழக்குச் செலவுக்காக ஆசிரியா் மதுரத்துக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT