நாமக்கல்

விவசாயக் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயனாளிகள் அனைவரும், கிசான் விவசாயக் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் கிசான் விவசாயக் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) பெறும் திட்டம் அனைத்து வணிக வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 84,907 விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள், இதுவரை எந்த வங்கியிலும் விவசாயக் கடன் அட்டை பெறவில்லையெனில், உடனடியாக அவா்கள் ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை மேலாளா்களை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விவசாயக் கடன் அட்டையைப் பெற்று பயனடையலாம்.

மேலும், கிராம பஞ்சாயத்து செயலா்களும், வேளாண் துறை அலுவலா்களும் தங்கள் பகுதியில் உள்ள பிரதம மந்திரி சம்மான் நிதித் திட்டப் பயனாளிகளைக் கண்டறிந்து, கிசான் கடன் அட்டையை வங்கியிலிருந்து பெறுவதற்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT