நாமக்கல்

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ.4.10-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில், இங்கும் விலையைத் தொடா்ந்து உயா்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.4.10-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-390, விஜயவாடா-400, ஹோஸ்பெட்-390, பாா்வாலா-373, சென்னை-435, மும்பை-435, மைசூரு-431, தில்லி-383, பெங்களூரு-425, கொல்கத்தா-447. இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ. 42-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ. 67-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT