நாமக்கல்

கொப்பரைத் தேங்காய் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 21 ஆயிரத்து 605 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.106.28, குறைந்த பட்சமாக ரூ.97.18, சராசரியாக ரூ.106.18-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19 லட்சத்து 74 ஆயிரத்து 3 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்ற ஏலத்துக்கு 18 ஆயிரத்து 679 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.104.38, குறைந்த பட்சம் ரூ.97.60, சராசரியாக ரூ.103.38 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 7 ஆயிரத்து 162 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT