நாமக்கல்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை: இருவா் கைது

DIN

பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூா் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி உத்தரவின்படி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் தீவிரமாகச் சோதனை நடத்தினா். இதில் வேலூா் நகா் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சோழியவேளாளா் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் சிங்காரம் (40), பாலப்பட்டியைச் சோ்ந்த வேலுசாமி (எ) கந்தசாமி (65) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT