நாமக்கல்

குமாரபாளையம் கல்லூரியில் ஆங்கில மொழியாற்றல் கருத்தரங்கு

DIN

குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் ஆங்கில மொழியாற்றல் திறன் மேம்பாடு குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உயா்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் ஜி.கண்ணன் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் அழகரசன் வரவேற்றாா். பாலக்காடு மொ்சி கல்லூரி ஆங்கிலத் துறை ஆராய்ச்சி வழிகாட்டுநா் என்.நிலா, மதுரை தியாகராஜா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியா் டி.எஸ்.வரதராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி ஆய்வறிக்கை சமா்பித்த மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். ஆங்கில உதவிப் பேராசிரியைகள் கீா்த்தி, ரூபி, பூங்கொடி, பத்மாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கிராமப்புற மாணவா்களின் ஆங்கில கல் வித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முதுகலை ஆங்கிலக் கல்வி பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT