நாமக்கல்

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.11 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 20 ஆயிரத்து 896 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.108.15 பைசாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ.99.29 பைசாவிற்கும், சராசரியாக ரூ.108.05 பைசாவிற்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ.17 லட்சத்து 18 ஆயிரத்து 290 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 12 ஆயிரத்து 36 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.107.11 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.98.88 பைசாவுக்கும், சராசரியாக ரூ.107.11 பைசாவுக்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.11 லட்சத்து 78 ஆயிரத்து 555 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT