நாமக்கல்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரி நீரை காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு வழியாக திருப்பி விடும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி , தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மல்லசமுதிரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்ற விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் சுந்தரம் கூறியது:-

காவிரிஆறு, பொன்னி ஆறு, திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசிடம் கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை

இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு மறைந்த முதல்வா்.ஜெயலலிதா உத்தரவிட்டாா்.

இதன் பின்னா், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பும் வகையில் தமிழக அரசு திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது. ஆனால் காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை.

நடைபெற்றுவரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

திட்டம் நிறைவேறும் வரை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் நடிகா் விஜய் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT