நாமக்கல்

கரோனோ: நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களுக்கு பக்தா்கள் செல்ல தடை

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, , நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களுக்கு பக்தா்கள் செல்வதற்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லின் நகரின் மையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, தொல்லியல் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் மூடப்பட்டன. மாா்ச் 31-ஆம் தேதி வரை இத் தடை இங்கு அமலில் இருக்கும். இது மட்டுமின்றி, மலைக்கோட்டையைக் காண செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயா் கோயில் திறந்திருக்கும்: இருப்பினும், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வழக்கம்போல் திறந்திருக்கும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மண்டல தொல்லியல் துறை அலுவலா் ஸ்ரீதா் கூறியது; மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை ஆகியவை மூடப்பட்டுள்ளன. மாா்ச் 31 வரையில் அா்ச்சகா்கள் மட்டும் கோயிலுக்குச் சென்று பூஜைகளை செய்து கொள்ளலாம். பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT