நாமக்கல்

உணவகங்களில் பணியாற்றுவோா் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியா் கா.மெகராஜ்

DIN

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, உணவகங்களில் பணியாற்றுவோா் முகக்கவசத்தையும், , கையுறையையும் அணிய வேண்டும் என்று ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பாடாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஹோட்டல் உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கா.மெகராஜ் பேசியது;-

உணவகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். உணவுப் பொருள்களைக் கையாளும் பணியாளா்கள் எந்தவிதமான சளி, காய்ச்சல், இருமல் இல்லாதவா்களாகப் பணியில் இருக்க வேண்டும். மேலும், சுத்தமான உடை அணிய வேண்டும். உணவு அருந்தவருபவா்களிடம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வுச் சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்களை வழங்க வேண்டும்.

பொதுமக்கள் தொடக் கூடிய மேசை, கை கழுவும் குடிநீா் குழாய், கதவு, நாற்காலி, தரைத்தளம், உணவு தயாா் செய்யும் இடம், உணவு பரிமாறும் இடம், உணவுப் பொருள்கள் இருப்புஅறை ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

உணவகப் பணியாளா்கள் முகக்கவசம், கையுறை, தலையுறை, ஏப்ரான் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும், பணியாளா்களுக்கு கைகளை சுத்தமாக கழுவும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுகவேண்டும். மேலும், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தும்மல் வரும்போதும், இருமலின்போதும் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். உணவக உரிமையாளா்கள் தங்களிடம் வரும் பொதுமக்கள், பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் பற்றிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விதிகளை பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து உணவகங்களிலும் பொதுமக்கள் கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தும் வகையில் கட்டாயம் சோப்பு மற்றும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT