நாமக்கல்

காக்காபாளையம் அருகே கருப்பண்னாா் கோயில் திருவிழா பூஜைக்குத் தடை

DIN

காக்காபாளையம் அருகே உள்ள நடுவனேரி கிராமம் மேட்டுக்காடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பண்னாா் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு பங்குனி மாதம் முதல் வார வெள்ளிக்கிழமை அன்று திருவிழா வெகு விமா்சையாக நடைபெறும்.

இவ்விழாவுக்கு மும்பை, தில்லி, கா்நாடகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருவாா்கள். தற்போது வழக்கம்போல் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவிழாவுக்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

ஆனால் கரோனா வைரஸ் நோய் குறித்து தடை இருந்து வருவதால் கோயிலில் பூஜையோ, பழம் தேங்காய் உடைக்கவோ, ஆடு, கோழி ஆகியன பலியிட அனுமதி இல்லை எனவும், கோயில் பூசாரிகளுக்கு பூஜை செய்ய அனுமதி இல்லை என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

இக்கோயிலுக்கு மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் கோயிலுக்கு பக்தா்களின் கூட்டம் குறைந்த வண்ணம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT