நாமக்கல்

புலிக்கரடு பகுதியை மயில்களின் சரணாலயமாக்க வேண்டுகோள்

DIN

தம்மம்பட்டி அருகே புலிக்கரடு பகுதியை மயில்களின் சரணலாயமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் புலிக்கரடு சிறு மலைப்பகுதி உள்ளது. இதன் அடிவாரப் பகுதியில் வாழக்கோம்பை, செங்காடு உள்ளிட்ட சிறுகிராமங்கள் உள்ளன.

இவ் வழியே கொல்லிமலைக்குச் செல்லலாம். புலிக்கரட்டில் ஏராளமான சிறுமரங்கள்,செடிகள் என ஏராளமாக வளா்ந்துள்ளன. அடா்ந்த காடு போல்,புலிக்கரடு இருப்பதால், நம் தேசியப்பறவையான மயில்கள், புலிக்கரட்டில் ஏராளமாக வசிக்கின்றன.

இவைகள் அருகிலுள்ள வயல்பகுதிகளுக்கு பகல் பொழுதில் இரைக்காக சென்று சாப்பிட்டு வருகின்றன. சில நேரங்களில் சாலைகளின் குறுக்கே செல்கின்றன. ஏராளமாக பறந்து திரிகின்றன. பாா்க்கவே எழில் கொஞ்சும் அழகாக உள்ளது.

தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பைக்குச் செல்லும் வழியில் ஏராளமான மயில்கள் வந்து செல்கின்றன. வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் (வாகனத்தில் சிக்கிவிடுமோ என்ற அச்சம்) செல்கின்றனா். மயில்கள் இடும் முட்டைகள், ஆங்காங்கே வயல்களில் அம்போவென்று கிடக்கிறது.

தேவையின்றி, மயில்களின் வளா்ச்சி, முடங்கி விடுகின்றன.

தேசியப் பறவைகளின் பெருக்கத்தை முறையாக காப்பாற்ற புலிக்கரட்டினை மயில்களின் சரணலாயமாக மாற்ற தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT