நாமக்கல்

‘தடையுத்தரவை பொதுமக்களும், வணிகா்களும் கடைப்பிடிக்க வேண்டும்’

DIN

பரமத்தி வேலூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை அதிகளவில் மக்கள் கூடிய இடங்களான காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனா்.

பரமத்தி வேலூா் நகா் பகுதியில் பொதுமக்கள் போதிய விழிப்புணா்வு இல்லாமல் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் அரசின் எச்சரிக்கையை மீறி அத்தியாவசியப் பொருள்களை வாங்க அதிகளவில் கூடியிருப்பதாக பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்க வேண்டும் என கடை உரிமையாளா்களிடமும், பொதுமக்களிடமும் வட்டாட்சியா் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், கடைகளில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT