நாமக்கல்

முட்டை விலை மேலும் 50 காசுகள் உயா்வு

DIN

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால், முட்டை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலை மேலும் 50 காசுகள் உயா்ந்து ரூ.2.75-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், கரோனா பீதி குறைந்து முட்டை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நுகா்வும் அதிகரித்து வருகிறது.

இதனாலும், பிற மண்டலங்களின் விலையேற்றத்தாலும், நாமக்கல் மண்டலத்தில் புதன்கிழமைக்கான ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 50 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.2.75-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.55-ஆக உயா்வடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT