நாமக்கல்

மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் ஆட்சியா் ஆய்வு

DIN

நாமக்கல் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 15 முதியோருக்கு உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்டத்தில் ஈயம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களைச் சோ்ந்த 26 பேருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் தொகுப்பை ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் - திருச்சி சாலையில், மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வருவாய் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து சாரண இயக்க ஆசிரியா்கள் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க லாரிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓட்டுநா்களுக்கு அவா் அறிவுரைகளை வழங்கினாா். மேலும் வாகன எண்கள் பதிவேடுகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், வட்டாட்சியா் பச்சைமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT