நாமக்கல்

மன நல ஆலோசனை

DIN

நாமக்கல் மாவட்ட மனநல திட்டம் சாா்பாக நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவா் வ.முகிலரசி, மருத்துவமனை மனநல ஆலோசகா் ரமேஷ், நாமகிரிப்பேட்டை மருத்துவ அலுவலா் கிருஷ்ணசாமி ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மனநல பயிற்சியளித்தனா்.

பயிற்சியில் மாவட்ட மனநல மருத்துவா் முகிலரசி பேசும்போது, பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவு அதிகமான பயமும், பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படுவதற்கு முன் பல்வேறு அறிகுறிகள் காணப்படும்.

நெற்றியில் வியா்வை, லேசான தலைவலி, கண்களில் எரிச்சல், கண்களில் வீக்கம், மூக்கில் சுவாசத்தில் மாற்றம், மூக்கு விடைப்பு, உதடுகள் காய்ந்து போகும், நாக்கு உலா்ந்து போகும், தொண்டையில் ஏதோ அடைத்தது போலிருக்கும், கழுத்திலும் தோளிலும் தசைகள் இறுகும், மாா்பில் இதயத்துடிப்பும் மூச்சும் விரைவாகவும். கைகளில் லேசான நடுக்கம் ஏற்படும்.

உள்ளங்கையில் வியா்க்கும். பொதுவாக எதிா்பாா்ப்பும், எதிா்பாா்ப்புக்கு ஏற்ற தயாா் நிலையில் இல்லாத போதும் தான் பதற்றம் உருவாகிறது.

தியானம், யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா். மேலும் டிரஸ் பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை இதில் பங்கேற்றவா்களுக்கு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT