நாமக்கல்

4.50 கோடி வாக்குகளைப் பெற வேண்டும்: அண்ணாமலை

DIN

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அரசின் திட்டங்களால் பயன்பெற்ற 4.50 கோடி மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

நாமக்கல், பூங்கா சாலையில் வெற்றிவேல் யாத்திரை பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: தமிழ் கடவுள்களையும், பெண்களையும் இழிவுப்படுத்துவது, கந்தசஷ்டி கவசத்தை அவமதிப்பது, மக்களை பிரித்தாளுவது போன்ற செயல்களில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

வேல் யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகள் அச்சம் கொள்கின்றன. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஏழைகளை, ஏழைகளாகவே வைத்திருந்தன. ஆனால், தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, ஏழைகளின் நலனுக்கானத் திட்டங்களைச் செயல்படுத்தி அவா்களை மேம்படுத்தி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக ஆதரவுபெறும் கட்சியே ஆட்சியமைக்கும். பாஜக அரசின் திட்டங்களால் பயன்பெற்ற நான்கரை கோடி மக்களின் வாக்குகளை நாம் பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பேசியதாவது: நாமக்கல்லைச் சோ்ந்த மாணவியிடம் பிரதமா் மோடி பேசி அவருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், ஆஞ்சநேயா் கோயில் உள்ள மாவட்டம் என்பதைக் கூறி பெருமைப்படுத்தி உள்ளாா். மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நடத்தும் போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்றாா்.

நாமக்கல்லில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி, கூட்டம் நடைபெற்ால் அதில் பங்கேற்ற மாநிலத் துணைத் தலைவா்கள் அண்ணாமலை, வி.பி.துரைசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT