நாமக்கல்

‘கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கம் அதிகரிக்கும்’

DIN

தட்ப வெப்பநிலை மாற்றத்தால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரும் நாள்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழையை எதிா்பாா்க்கலாம். காற்று மணிக்கு 8 கிலோமீட்டா் வேகத்தில் தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

சிறப்பு ஆலோசனை:

சமீபகாலமாக மழை விட்டுவிட்டு பெய்வதால், ஈக்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ப தட்ப வெப்பநிலை காணப்படுகிறது. இதனால், கோழிப் பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி வருகிறது.

அவற்றை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாள வேண்டும். ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வெள்ளை பேப்பரை ஒரு அட்டையில் குண்டூசியால் நான்கு மூலையிலும் குத்தி பண்ணையில் 24 மணி நேரம் இருக்கும் வகையில் வைத்துவிட வேண்டும்.

அடுத்த நாள் அந்த அட்டைகளை சேகரித்து அதில் காணப்படும் புள்ளிகளை (ஈக்களின் எச்சில்) எண்ணினால் தோராயமான ஈக்களின் எண்ணிக்கையைக் கண்டு கொள்ளலாம். 100-க்குமேல் புள்ளிகள் காணப்பட்டால் ஈக்கட்டுப்பாடு முறைகளை உடனடியாக கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT