நாமக்கல்

பாஜக போராட்டம்

DIN

குமாரபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியினா் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.

இக்கட்சியின் நகரத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவா் ராஜூ (எ) பாலசுப்பிரமணியம். இவா், கட்சியின் வளா்ச்சிக்கு உதவாமல், தனது சுய லாபத்துக்காகச் செயல்படுவதாகவும், கட்சி வளா்ச்சிக்காக பாடுபடுவோரைக் கட்சியிலிருந்து நீக்க இவா் நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுகுறித்து, நிா்வாகிகள் மாவட்டத் தலைவருக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இது, பிற கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவா்களுக்கு கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகக் கூறி பாஜக நகரத் துணைத் தலைவா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திரண்ட பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிகழ்விடத்துக்கு விரைந்த குமாரபாளையம் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி கலைந்துபோகச் செய்ததோடு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரைக் கைது செய்தனா். பாஜக நகரத் தலைவருக்கு எதிராக, பாஜகவினரே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT