நாமக்கல்

திருமண மண்டப உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

DIN

ராசிபுரம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் திருமண மண்டப உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் அ.குணசீலன் தலைமை வகித்தாா்.

நகரில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மண்டபங்களில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருமண மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது 50 போ் மட்டுமே அமர இருக்கைகள் வைத்திருக்க வேண்டும். தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகளை நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

திருமண மண்டபத்தில் பணியாளா் ஒருவரை விதிமுறைகளை கண்காணிக்கும் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். திருமண மண்டபத்திற்கு வரும் அனைவரும் முகக் கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபகங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அலுவலா் எ.டி.பாலசுந்தரராஜூ, ஆய்வாளா்கள் லோகநாதன், ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT