நாமக்கல்

இளையபெருமாள் மலைக்கோயிலில்சுவாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

DIN

கரோனா தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டம், இறையமங்கலத்தில் அமைந்துள்ள பெருமாள்மலை இளையபெருமாள் மலைக்கோயில் சுவாமியை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் மணிராஜ் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வேகமாக கரோனா தொற்று பரவி வருவதால், பரவலைத் தடுக்க சனிக்கிழமைகளில் மட்டும் மலை மேல் உள்ள சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என முடிவெடுக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் சுவாமி தரிசனம்  செய்யவும், பொங்கல் வைக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் எனவும், மீறுபவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT