நாமக்கல்

பள்ளியபாளையத்தில் 8 சாயப் பட்டறைகளுக்கு அபராதம்

DIN

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியின் சாா்பில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததாக எட்டு சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள சாயப் பட்டறைகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளா் இளவரசன், பொறியாளா் சரவணன், சுகாதார அலுவலா் நகுல் சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் சாயப்பட்டறைகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வில் ஈடுபட்டனா்.

நேரு நகா், ரயில் நிலைய சாலை, காந்திபுரம் போன்ற பகுதியில் உள்ள 12 சாயப் பட்டறைகளில் சோதனையிட்டனா். இதில் 8 சாயப் பட்டறைகளில் தண்ணீா் தொட்டிகள் சுத்தப்படுத்தாமல் திறந்த நிலையில் இருந்ததால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் லாா்வாக்கள் அதிகளவில் இருந்ததை அறிந்தனா். மேலும் சாயப்பட்டறை வளாகத்தில் உள்ள பழைய டயா்கள், தட்டுமுட்டு சாமான்களில் மழைநீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தன.

இதையடுத்து பொது சுகாதாரத்தைக் கெடுக்கும் வகையில், கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த 8 சாயப்பட்டறை மீது தலா ரூ .5ஆயிரம் வீதம் ரூ. 40 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT