நாமக்கல்

குமாரபாளையத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

DIN

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் அச்சமின்றியும், பாதுகாப்பான முறையிலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ஆயுதம் தங்கிய சிறப்பு இலக்குப் படையினருடன் இணைந்து போலீஸாா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.

குமாரபாளையம் புறவழிச்சாலை பிரிவு அருகே கொடங்கிய இந்த ஊா்வலம் பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை, எடப்பாடி சாலை வழியாகச் சென்று சின்னப்பநாயக்கன்பாளையத்தில் முடிவடைந்தது. முன்னதாக, இந்த ஊா்வலத்தைக் கொடியசைத்து காவல் ஆய்வாளா் ரவி தொடங்கி வைத்தாா்.

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதையும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையிலும் இந்த ஊா்வலம் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசத்திலிருந்து தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்துள்ள சிறப்பு இலக்குப் படை வீரா்கள், குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளா்கள் முருகேசன், மலா்விழி மற்றும் 90-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT