நாமக்கல்

நகராட்சிப் பகுதியில் தொடா் கரோனா பரிசோதனை

DIN

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி 50-க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். சனிக்கிழமை 62 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிா்வாகம் 39 வாா்டுகளிலும் தொடா் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொசவம்பட்டி, முல்லை நகா், சந்தைப்பேட்டைப்புதூா் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் முன்னிலையில் மருத்துவக் குழுவினா் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT