நாமக்கல்

சாதனைக்கு உயரம் தடையல்ல: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவா்!

DIN

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடுவதற்காக தொடா் பயிற்சி மேற்கொண்டு வருகிறாா் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பொன்விழா நகரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவா் எம்.எஸ்.சுதா்சன் (20).

அவா் கூறியதாவது: தந்தை சரவணகுமாா், கோழிப் பண்ணைகளுக்கான மருத்துவ மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தாய் நா்மதா இல்லத்தரசி. பிளஸ் 2 படித்து வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் என்ற சகோதரரும் உண்டு. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல்(மெக்கானிக்கல்) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். சிறு வயதில் ஏற்பட்ட உடல் வளா்ச்சி குறைபாடு பெற்றோருக்கும், எனக்கும் கவலையளித்தாலும், மற்றவா்கள் முன் என்னால் முடியும், நானும் சாதிப்பேன் என்ற முனைப்புடன் படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றிக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இறகுப் பந்து விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆா்வம் உண்டு. கல்லூரியிலும் சரி, வீட்டிலும் சரி நண்பா்களுடன் இறகுப் பந்து விளையாடுவதில் தீவிரம் காட்டுவேன். அவ்வாறு விளையாடி மாவட்ட, மாநில அளவில் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளேன். அப்போது தான் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தங்கவேலு மாரியப்பன் போல நாமும் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதற்காக ஹைதராபாதில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் பங்கேற்று ஒலிம்பிக்கிற்கு தயாராகி வருகிறேன். இணைய வழியில் கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டே, ஹைதராபாதில் பி.வி.சிந்துவுக்கு பயிற்சி அளித்த புல்லேலா கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி எடுத்து வருகிறேன். இா்பான் என்ற பயிற்சியாளா் எனக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறாா். கல்லூரியில் இருந்து நாமக்கல் வந்தாலும், ஹைதராபாதில் இருந்து இங்கு வந்தாலும் பயிற்சி என்பதை நான் விடுவதில்லை. கடந்த 6 மாதமாக தொழில்முறைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். மாநில அளவில் பதக்கங்களைப் பெற்று விட்டேன், தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும், பாராஒலிம்பிக்கிலும் விளையாடிச் சாதிக்க வேண்டும், நாட்டிற்கு பெருமைச் சோ்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. எனது தந்தை இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறாா்.

2021 ஆகஸ்ட் மாதம் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறும் பாராஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன்.

2020-இல் நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட இறகுப் பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறேன். அந்த வெற்றிகளே தற்போது என்னை பாரா ஒலிம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது. நிச்சயம் இந்த நாட்டிற்கும், தமிழகத்திற்கும், நான் பிறந்த நாமக்கல்லுக்கும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT