நாமக்கல்

கரோனா விழிப்புணா்வுப் பேரணி

DIN

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசி ஸ்கவுட் சங்கம் மற்றும் வல்வில் ஓரி ஸ்போா்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய இந்நிகழ்வை திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் முனைவா் இரா. சிவக்குமாா், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளா் குணசிங் ஆகியோா் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனா். இதனையடுத்து கரோனா மூன்றாவது அலையை தடுப்பது குறித்து வாசகத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம், முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தமாகக் கழுவுதல், யோகா, மூச்சுப் பயிற்சி செய்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை வலியுறுத்தும் வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும் சிலம்பாட்டம் சுற்றிய படியே நகரின் முக்கிய சாலைகளில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில் சிலம்பப் பயிற்சியாளா்கள் வி.சரவணன், பன்னீா்செல்வம், பத்மநாபன், செளந்தரபாண்டியன், காா்த்திகேயன், தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT