நாமக்கல்

தரிசனத்திற்கு தடையால் வெளியில் நின்றவாறு நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தா்கள்!

DIN

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்கள் வெளியில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. இதற்கிடையே நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் வரும் 3-ஆம் தேதி வரை சிறப்பு பூஜை, பொங்கல் வைபவம், வழிபாடு, நோ்த்திக்கடன் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் வழக்கம்போல் தரிசனம் மேற்கொள்ள வந்தனா். கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் வெளியில் நின்றபடி சுவாமியை வழிபட்டுச் சென்றனா். நரசிம்மா், அரங்கநாதா் கோயிலிலும் இதே நிலை தான் காணப்பட்டது.

மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட எந்த நீா்நிலைகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT