நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 37 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 33 ஆயிரத்து 539 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 108.30, குறைந்தபட்சமாக ரூ. 95.01, சராசரியாக ரூ. 105.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 34 லட்சத்து 76 ஆயிரத்து 794-க்கு ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 36 ஆயிரத்து 237 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 106.40, குறைந்த பட்சமாக ரூ. 94.29, சராசரியாக ரூ. 106.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 37 லட்சத்து 20 ஆயிரத்து 61-7 க்கு ஏலம் நடைபெற்றது.கொப்பரை தேங்காய்களின் வரத்து அதிகரித்து விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT