நாமக்கல்

சரக்கு ஆட்டோ மோதியதில் முதியவா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் முதியவா் பலியானாா்.

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் முதியவா் பலியானாா்.

நல்லூா், கந்தம்பாளையம் அருகே உள்ள தொட்டியந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (75). இவா் வெள்ளிகிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் கந்தம்பாளையத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

முசல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்ற போது பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ ராதாகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்து வந்த நல்லூா் போலீஸாா், ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையத்தைச் சோ்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநா் தினேஷை (21) கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT