முகப்பு
நாமக்கல்

ரூ. 24.35 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24.35 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

நாமக்கல்

ரூ. 24.35 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24.35 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24.35 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.106.40-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 94.29-க்கும் விற்பனையானது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 24 ஆயிரத்து 500 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 105.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 91.25-க்கும், சராசரியாக ரூ. 103.55-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 24 லட்சத்து 35 ஆயிரத்து 72 க்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →