சாலை விபத்தில் பெண் பலி
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
நாமக்கல்சாலை விபத்தில் பெண் பலி
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தேவிபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் சுதா தனது இரண்டு குழந்தைகள், தாய் ராசம்மாளை (50) தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நோக்கி சென்றாா்.
பரமத்தி, மரவாபாளையம் பிரிவு சாலை அருகே சாலையைக் கடப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி வந்த காா்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று அவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராசம்மாள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். சுதா, அவரது குழந்தைகள் உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.